தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாட்டினை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகிறது.
வேறு மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுவதை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
போதைப்பொருட்கள் கடத்தல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்பட்டு வரு கின்றனர். ஒரு காலத்தில் தமிழகத்தில் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்தது.
போலீசாரின் தொடர் நடவடிக்கையால் அப்பகுதி யில் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டது. இதனால் போதைக்கும்பல் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் கஞ்சா கடத்த தொடங்கினர்.
வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு வருப வர்களும் கஞ்சா கடத்தி வருவதும், போலீசில் பிடி படுவதும் தொடர்ந்து நடந்து தான் வருகிறது. மேலும் கொக்கைன் உள்ளிட்ட உயர் ரக போதைப் பொருட்கள் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன.
போதைப்பொருட்கள் புழக்கம் காரணமாகவே குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதைய டுத்து போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப் படுத்த வும், வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட் கள் கடத்தி வருவதை தடுக்கவும் அதிரடி நடவ டிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன.
தமிழக டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற மகேஷ்குமார் அகர்வால் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட் கள் கடத்தப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுகளுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
வெளி மாநிலங்களில் இருந்து போதைப்பொருட் கள் கடத்தலுக்கு முற்றுப் புள்ளி வைக்க அதிரடி நட வடிக்கை எடுக்குமாறு அறி வுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டங்கள் தோறும் போலீசார் சோத னைகள் நடத்தி வருகிறார்கள்.
காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கடலோரக் காவல் படையினர் மற்றும் கடற்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தப்படு வதைத் தடுத்து வருகின்றனர்.
சர்வதேச எல்லைப் பகுதிகள் மற்றும் மாநில எல்லைகளில் நவீன டிரோன்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படு கின்றன.
வெளி மாநிலங்களில் இருந்து ஆம்னி பஸ்கள் மற்றும் வாகனங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆம்னி பஸ்களின் பார்சல் சேவை மூலமாகப் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, பார்சல் மையங்களில் போலீசார் மோப்பநாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். பார்சல்களை அனுப்புபவர்கள் மற்றும் பெறுபவர்களின் ஆதார் போன்ற அடையாள ஆவ ணங்களைப் பதிவேட்டில் பராமரிப்பது நிறுவனங்க ளுக்குக் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் அல்லது வெளிமாநில மது பானங்களை எடுத்துவரும் பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவி நாசி வழியாக வெளிமாநி லங்களில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படு வதை தடுக்கும் பொருட்டு, போதைப்பொருள் கண்ட றியும் சிறப்பு மோப்ப நாயு டன் போலீசார் விடிய விடிய அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரிஷ் அசோக் யாதவ் உத்தரவின் பேரில், அவிநாசி டி.எஸ்.பி. கனகசபாபதி தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, சப் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த அதிரடி வேட்டையில் களமிறங்கினர்.
அவிநாசி - திருப்பூர் சாலையில் உள்ள சேலம் - கொச்சின் பைபாஸ் சந்திப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரிசா, பெங்க ளூரு, சென்னை, ஐதராபாத் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து கேரளா மற்றும் கோவை நோக்கிச் சென்ற சொகுசு ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி சோதனை செய்தனர்.
தமிழக காவல் துறையின் துப்பறியும் நாய் பிரிவில், திருப்பூர் மாவட்டத்திற்கு என்றே பிரத்யேகமாக முதல்முறையாக போதைப் பொருள் தடுப்பு நாய் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. ‘மேக்ஸ்’ என்று பெயரி டப்பட்டுள்ள இந்த மோப்ப நாய் பங்கேற்ற முதல் அதிகாரப்பூர்வ வாகன சோதனை இதுவாகும்.
பஸ்களின் பதுக்கல் அறைகள் மற்றும் பார்சல் மூட்டைகள், போதைப் பொருள் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை ‘மேக்ஸ்’ மோப்பம் பிடித்து துல்லியமாக ஆய்வு செய்தது.
விடிய விடிய நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில், சுமார் 60-க்கும் மேற்பட்ட சொகுசு ஆம்னி மற்றும் வால்வோ பேருந்துகளும், 25-க்கும் மேற்பட்ட பார்சல் லாரிகள் மற்றும் வேன்களும் அக்குவேர் ஆணிவேராக சோதனை செய்யப்பட்டன.
கோவை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ரெயில்கள், பஸ்கள், லாரிகள், பார்சல் சர்வீஸ், கார்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
அதன்படி நேற்றிரவு 4-வது நாளாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பஸ்கள், லாரிகள் சந்தே கப்படும் ஆட்டோக்கள் என அனைத்து வாகனங்க ளையும் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உக்கடம் அருகே ஆட்டோவில் 45 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேர் சிக்கினார்.
அதேபோன்று கோவை பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் சந்தேகப்படும் இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தினர்.