தமிழக செய்திகள்

திருப்பூர் அருகே சுற்றுலா வாகனம் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே சுற்றுலா வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து ஊட்டி நோக்கி சுற்றுலா சென்ற வாகனத்தின் மீது கேஸ் டேங்கர் லாரி மோதியது. வாகனத்தில் 4 ஆண்கள், 4 பெண்கள் என 8 பேர் பயணித்த நிலையில் 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவருக்கு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 4 பேருக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.