தமிழக செய்திகள்

குரூப் 2 தேர்வு எழுத வந்த வனக்காப்பாளர் பலி

போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனக்காப்பாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பர்கூர் மலைப்பாதையில் வேனும், மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், வனக்காப்பாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், அய்யம்பாளையம் அருகேயுள்ள வடிவுள்ள மங்கலம், குன்னிக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் நவீன் (வயது 27). இவர், தட்டக்கரை வனச்சரகத்தில் (சீபு நெட்டி) வனக்காப்பாளராகப் பணியாற்றி வந்தார்.

விபத்து

இந்நிலையில், இன்று காலை 7.00 மணியளவில் நவீன் குருப்2 தேர்வு எழுத பர்கூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிள் வாகனத்தில் அந்தியூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

தாமரைக்கரை - அந்தியூர் சாலையில் உள்ள நெய்க்கரை வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே அந்தியூரில் இருந்து பர்கூர் நோக்கி வந்த பிக்கப் வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது.

அரசு மருத்துவமனை

இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்ட நவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, நெஞ்சின் மீது வேனின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அந்தியூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனக்காப்பாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT