தமிழக செய்திகள்

ஓசூரில் தொழிற்சாலை கட்டுமான பணியில் விபத்து - 3 பேர் பலி

இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என் தீயணைப்புதுறை வீரர்கள் தேடி வருகின்றனர்.

ஓசூரில் புதிய தொழிற்சாலை கட்டுமான பணியில் ஏறப்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாட்டா காலணி உற்பத்தி ஆலையில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த கான்கிரீட் கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் இரண்டு அல்லது மூன்று தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாரப்பள்ளியில் இந்த விபத்தானது ஏற்ப்பட்டுள்ளது.வளைவு வடிவக் கூரைக்காக சுமார் 17 தொழிலாளர்கள் கான்கிரீட் போட்டுக்கொண்டிருந்தபோது, ​​தாங்கி நிற்கும் ஜாக் ஒன்று நழுவியதால், கூரையின் சட்டகத்தின் பெரும் பகுதி இடிந்து தொழிலாளர்கள் மீது கான்கிரீட் பலகைகளும் இரும்புக் கம்பிகளும் விழுந்ததில், அவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சுமார் 10 தொழிலாளர்கள் காயங்களுடன் தப்பித்து மீட்கப்பட்டனர்,என்று சிப்காட் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவலின் அடிப்படையில் சிப்காட் காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிரது. மேலும் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT