தமிழக செய்திகள்

லாரி மீது கார் மோதல்- பெண் உள்பட 2 பேர் பலி

அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த மோகன் குமார் மற்றும் அஞ்சனா ஆகிய இருவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் மோகன் குமார். இவர் குடும்பத்தினருடன் வாடகை காரில் சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

விபத்து

புதுக்கோட்டையை சேர்ந்த அப்துல் கலாம் (வயது 25) என்பவர் காரை ஓட்டினார். இன்று காலை கார் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளி எதிரே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து நத்தம் நோக்கி இரும்பு பாரம் ஏற்றி சென்ற சென்ற லாரியின் பின்பக்கத்தில், அப்துல் கலாம் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த மோகன் குமார் (70), அஞ்சனா (37) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த சுலேகா (61), ஐஸ்வர்யா (28), வருண் மோகன் (38), 12 வயது சிறுவன் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

சிகிச்சை

பின்னர் அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரின் முன் பகுதி உருக்குலைந்தது.

போலீசார் வழக்கு பதிவு

மேலும் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த மோகன் குமார் மற்றும் அஞ்சனா ஆகிய இருவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT