தமிழக செய்திகள்

தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.குற்றப்பத்திரிகையில் அசோக்குமார் உள்ளிட்ட 13 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மாலை மலர்

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

அசோக் குமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

அமலாக்கத்துறை கடந்த ஜனவரியில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அசோக்குமார் உள்ளிட்ட 13 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.