தமிழக செய்திகள்

வறுமைதான் இந்தியாவின் எதிரி என்று ஆழ்ந்த நோக்கோடு கூறியவர் அப்துல் கலாம்- மு.க.ஸ்டாலின் புகழாரம்

கற்ற கல்வியாலும் கண்ட கனவுகளாலும் உயர்ந்தவர் அப்துல் கலாம் என்றார் மு.க.ஸ்டாலின்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மிக எளிய பின்புலத்தில் பிறந்து, கற்ற கல்வியாலும் கண்ட கனவுகளாலும் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்த பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

வறுமைதான் இந்தியாவின் எதிரியென ஆழ்ந்த நோக்கோடு கூறியவர் ஐயா அப்துல் கலாம் அவர்கள். அப்படி கூறியது மட்டுமில்லாமல், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எதிரியை வென்றுவிட முடியும் என்றும் அவர் கனவு கண்டார்.

நமது திராவிட அரசில், அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைத்ததோடு, அவரது பெயரிலான விருதினையும் ஆண்டுதோறும் வழங்கிப் போற்றினோம்.

அப்துல் கலாம் அவர்கள் ஆசைப்பட்டபடி, வாய்ப்புகளையும் வளங்களையும் அனைத்துத் தரப்பினரும் சமமாகப் பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இளைஞர்கள் உறுதியேற்க இந்நாளில் வேண்டுகிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT