அண்ணா சொன்னது போல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியோடு வருபவர்களுக்கு சமம். ஆளுங்கட்சியினர் எண்ணெய் உடன் கூடிய கரண்டியுடன் வரவேண்டும்.
தமிழ்நாடு சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-
ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு கொண்டு வந்தது திமுக அரசு. அம்பேத்கர் அயலக திட்டத்தை கொண்டு வந்தது திமுக. சிலர் தேவையில்லாத விஷயங்களை எழுப்பி தவறான பாதைக்கு செல்கின்றனர் என்றார்.
சமூக நீதி பேசக்கூடிய திமுக கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. மேற்கு வங்கம், பீகாரில் 3 மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி செயல்படுத்தினார்கள். மத்திய அரசு பாஜக அனுமதி கொடுக்க வேண்டும் என்று தப்பிக்க கூடாது என்று கூறினார்.
அண்ணா சொன்னது போல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியோடு வருபவர்களுக்கு சமம். ஆளுங்கட்சியினர் எண்ணெய் உடன் கூடிய கரண்டியுடன் வரவேண்டும். சாதி வாரி கணக்கெடுக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ பேச்சிற்கு த.வெ.கவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய திமுக எம்எல்ஏவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
திமுக எம்எல்ஏ பேசியது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 2015 முதல் 2021 வரை திமுகவுக்கு பணியாற்றியது எல்லோருக்கு தெரியும், உங்கள் தலைவருக்கும் என் பணியும் தெரியும். உண்மையான பணியாற்றியவன் நான். உங்கள் அப்பாவிடன் தான் கேட்க வேண்டும், நான் சொல்ல ஆதரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல. நான் பணி செய்தவரை என் பணியை முடித்துவிட்டு அடுத்த பணிக்கே வந்துவிட்டேன் என்றார்.
இதையடுத்து பேசிய சபாநாயகர், வாளோடு வரும் எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சி கேடயம் கொண்டு தடுக்க வேண்டுமே தவிர வாள் கொண்டு எதிர்க்க கூடாது என்றார்.