சட்டசபையில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணியில் அதிக நிதிக் கசிவு ஏற்பட்டுள்ளது.
நிதிக் கசிவு தொடர்பாக 30 நாட்களாக தகவல்களை திரட்டி வருகிறோம்.
பெண்கள் படிக்கும் பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை. பள்ளிகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறது.
பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை.
நான் 10-ம் வகுப்பு படித்தபோது இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரையிலும் கூட கட்டப்படவில்லை.
பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை இணைந்து 234 தொகுதியிலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உண்மை நிலை குறித்து அறிக்கை அளித்து தேவையான நிதி குறித்தும் தெரிவிக்கலாம்.
ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும்.
அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்துவதில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.
அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பராமரிப்பதில் எந்த ஊழலும் இருக்க கூடாது.
பொதுப்பணித்துறையில் கடந்த 30 ஆண்டுக்களுக்கான தகவலை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
சர்வே 40% நிறைவடைந்த நிலையில் முழு பணியும் நிறைவடைய மேலும் 2 மாதங்கள் ஆகும். எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
கல்வி நிறுவன கட்டிடங்கள் 3 ஆக பிரிப்பு. சிவப்பு நிறம் பயன்படுத்த முடியாத கட்டிடம், மஞ்சள் நிறம் சீரமைக்க வேண்டிய கட்டிடம்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவைப்படாத பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகளில் பூட்டப்பட்ட கதவுகள் உடைய கழிப்பறை கட்டுவதற்கு தான் முதல் கையெழுத்து போட்டேன்.
முறையான கழிவறை இல்லாததால் 8 மணி நேரம் வரை பள்ளி மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மாணவிகளுக்கு கழிப்பறை என்பது தான் முதல் சேவை. ஏற்கனவே அமைச்சர் ஆதவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.
குற்றம் நடப்பதை தடுக்கும் வகையில் பள்ளிகளில் சிசிடிவி பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பள்ளிக்கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.
அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லாததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி.
கழிப்பறையே கட்டவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர், அது தவறு.
எந்த கட்சி, எந்த ஆட்சியை பற்றியும் நான் பேசவில்லை, மக்கள் எதை எதிர்பார்க்கின்றனரோ அதை தான் சொல்கிறேன்.
அரசு கல்வி என்பது கருணை அடிப்படையிலான ஒன்று அல்ல, அது உரிமை அடிப்படையிலான ஒன்று.
காமராஜர் காலத்தில் படித்ததால் தான் எதிர்தரப்பினர் படித்தபோது அரசு பள்ளி நல்ல நிலையில் இருந்தது.
இவ்வாறு கூறினார்.