தமிழக செய்திகள்

குதிரை பேரம் என பேசிய இபிஎஸ்: பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா - களேபரமான சட்டசபை

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை நீட், ஜிஎஸ்டி வரவில்லை என்றார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசும்போது, இந்த ஆட்சியில் ஒரு கட்சியில் வெற்றி பெற்று ராஜினாமா செய்கிறார்கள். உடனே வேறு கட்சியில் சேருகிறார்கள். 'குதிரை பேரம்' இதனை தவிர்க்க வேண்டும் என பேசினார்.

அப்போது எழுந்து குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:

2017-க்கு பிறகு நடைபெற்றது உண்மையான அதிமுக ஆட்சி.

2017-க்கு பிறகு இருந்தது அதிமுக இல்லை.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை நீட், ஜிஎஸ்டி வரவில்லை.

அதிமுக ஆட்சிக் காலத்தில் உங்களுடைய நலனுக்காக நீங்கள் டெல்லியில் சரணடைந்தீர்கள்.

எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைகின்றனர்.

அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அங்கிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் பயணிக்கின்றனர் என தெரிவித்தார்.

இதையடுத்து, அவையில் அதிமுகவினர் அமளியில் ஏற்பட்டனர்.

குதிரை பேரம் குறித்து அதிமுக- தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி மாறி முழக்கமிட்டதால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

அவர்களை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அமைதிப்படுத்தினார்.