தமிழக செய்திகள்

அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விடவேண்டும் என்பதா? - அமைச்சர் மீது ஆ.ராசா கடும் தாக்கு

பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அரசியலில் கிரகப் பிரவேசம் நடத்திய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு வெள்ளையடித்துக் கொண்டார்கள்.

அண்ணா அறிவாலயத்தை குறை சொல்கின்ற ஒரு கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது என்று திமுக எம்பி ஆ.ராசா கூறினார்.

அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “அண்ணா அறிவாலயத்துக்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடும் நிலை உருவாகும்” என்று பேசினார்.

ஆ.ராசா

இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ.ராசா பேசும்போது அமைச்சர் நிர்மல்குமாரை மறைமுகமாக கண்டித்தார். விழாவில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-

இன்றைக்கு சிலருக்கு காரில் தேசிய கொடி வந்து விட்ட காரணத்தினால் அறிவாலயத்துக்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடலாம் என்று சில அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம்

பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அரசியலில் கிரகப் பிரவேசம் நடத்திய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு வெள்ளையடித்துக் கொண்டார்கள். அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு பல முறை வெள்ளையடித்துக் கொண்டார்கள். தமிழ்நாடு தனக்கு வெள்ளையடித்துக் கொண்டது.

எனவே அந்த அறிவாலயத்தை குறை சொல்கின்ற ஒரு கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த கூட்டத்தை ஓட்டுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.