தமிழக அரசு நிர்வாகத்தை தொடர்ந்து விமர்சித்து வந்த சவுக்கு சங்கர் அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழல் முறைகேடுகள் செய்ததாக பேசி வருகிறார். இதனால் பலமுறை சசர்ச்சைகளிலும் சிக்கினார்.
குறிப்பாக, பெண் போலீசாரை அவதுாறு செய்த புகாரில் 2024-ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. வழக்கு விசாரணையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.
வெளியே வந்து மீண்டும் யூடியூப் சேனலில் பேசி வந்த அவர், கஞ்சா வைத்திருந்தது உட்பட வேறு சில புகார்களில் 2024 டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.
வழக்கு தொடர்பாக பேட்டி அளிக்கக்கூடாது , வழக்கில் தொடர்புடைய நபர்களை சந்திக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இருப்பினும் நிபந்தனைகளை மீறியதாக, ஆந்திராவில் இருந்த சவுக்கு சங்கரை கடந்த 8 ஆம் தேதி தமிழக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சவுக்கு சங்கரை சிறையில் இருந்து விடுவிக்க அவரது தாயார் கமலா சட்டப்போராட்டம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் தயார் கமலா இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.