தமிழக செய்திகள்

தி.மு.க கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி உறுதி- உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்கள் புடைசூழ இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இந்நிலையில், திமுக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்கள் புடைசூழ இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேப்டு மனு தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலின் வெற்றி உறுதி என பேட்டி அளித்தார்.

அப்போது அவர், 234 தொகுதிகளில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவார்கள்" என்றார்.