தமிழக செய்திகள்

கிரேன் மூலம் கன்டெய்னரை தூக்கியபோது விபத்து- உடல் நசுங்கி ஒருவர் பலி

3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கன்டெய்னர் பெட்டி விழுந்து விபத்துக்குள்ளானது.

அதிக எடை கொண்ட கன்டெய்னர் விழுந்ததில், கீழே வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிரேன் மூலம் கன்டெய்னரை தூக்கியபோது கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT