தமிழ்நாடு செய்திகள்

தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதி பயங்கர விபத்து- 4 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றபோது விபத்து.விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

தஞ்சையில் இருந்து சுப நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் கார் மீது சுற்றுலா வேன் மோதியது.

காரில் வந்தவர்கள் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வேனில் வந்தவர்கள் சிறிய காயங்களுடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.