தமிழக செய்திகள்

ஏழை, எளிய மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் VB-G RAM G திட்டம்!- நயினார் நாகேந்திரன்

VB-G RAM G திட்டம் தற்போது அமலுக்கு வந்திருப்பது, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

கிராமப்புற மக்களின் நிதிச்சுமையை குறைத்து, அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், VB-G RAM G திட்டத்தை உருவாக்கிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் உட்கட்டமைப்பையும் ஒரே சேர மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டு, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த VB-G RAM G திட்டம் தற்போது அமலுக்கு வந்திருப்பது, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்வு, உயர்த்தப்பட்ட தினக்கூலி, வேலை செய்ததற்கான ஊதியம் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படாவிடில், அதற்கான தாமத ஊதிய இழப்பீடு (Delayed Payment Provision), வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலை வழங்காத பட்சத்தில், வேலையின்மை உதவித் தொகை (Unemployment Provision), வேலை செய்பவர்களுக்கு மட்டுமே முழுப்பலனும் கிடைக்கும் வகையில் இடைத்தரகர்கள் இல்லாத நேரடி பணப் பரிமாற்றம் என பல்வேறு பரிணாமங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டம் நமது தேசத்தின் வளர்ச்சியில் ஓர் முக்கிய மைல் கல்லாகும்.

நமது நாட்டின் வளர்ச்சியையும், அம்மக்களின் முன்னேற்றத்தினையும் அடிப்படையாகக் கொண்டு, இத்திட்டத்தை வடிவமைத்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் உயிர்நாடியான கிராமப்புறங்களின் பொருளாதார திரு. நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையை தமிழகம் வரவேற்கிறது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.