தமிழ்நாடு செய்திகள்

வார விடுமுறைக்காக சென்னையில் இருந்து 966 சிறப்பு பஸ்கள்

கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளை 270 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.கோயம்பேட்டில் இருந்து நாளை தலா 51 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மாலை மலர்

வார விடுமுறையையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 966 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளை (14-ந்தேதி) 270 பஸ்களும், 15-ந்தேதி 275 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேட்டில் இருந்து நாளை (14-ந்தேதி) மற்றும் 15-ந்தேதிகளில் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து தலா 20 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.