தமிழக செய்திகள்

மெட்ரோ ரெயில்களில் கடந்த மாதத்தில் 95.43 லட்சம் பேர் பயணம்

அதிகபட்சமாக 14.8.2024 அன்று 3,69,547 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:-

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 14.8.2024 அன்று 3,69,547 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 33,42,595 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 16,026 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 6,050 பயணிகள், கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,97,858 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,81,096 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், போன்ற அனைத்து வகையான பயணச் சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

95.43 lakh passengers recorded to have travelled in August, 2024CMRL has always endeavored to provide the people of Chennai with a safe, efficient, and reliable travel partner. A total of 95,43,625 passengers have travelled in the Metro Trains from 01.08.2024 to 31.08.2024.… pic.twitter.com/s4kSIMPAjU