தமிழக செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தது.

எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

இந்நிலையில் கச்சத்தீவு - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகுகள் பறிமுதல்

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 9 பேரை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.