தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கூடுவாஞ்சேரி பணிமனையில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை இந்த வழித்தடத்தில் 8 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.35, 2.15, 3 மணி, 4.25 ஆகிய நேரங்களில் கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும். பயணிகளின் வசதிக்காக கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரத்திலும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு மதியம் 2.30, 3.15, 4 மணி, 5.24 ஆகிய நேரத்திலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.