தமிழக செய்திகள்

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது 7வது வழக்குப்பதிவு- வீடு, அலுவலகத்திற்கு சீல்

சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு.ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல்.

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது.

இந்த சோதனையில் ரூ.2 லட்சம் பணம், கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT