தமிழக செய்திகள்

பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் கடத்தி வந்த 662 கிலோ குட்கா பறிமுதல்- 2 பேர் கைது

கோவில்பட்டி பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

குட்கா மற்றும் புகையிலை விற்றதன் மூலம் வைத்திருந்த ரூ.7 லட்சத்து 57 ஆயிரத்தி 500 பணம் ஆகியவற்றை காருடன் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் உத்தரவின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குட்கா

இந்நிலையில் பெங்களூரில் இருந்து கார் மூலம் குட்கா கடத்தப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் குட்கா கடத்தப்பட்டு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

கைது

இதனைத் தொடர்ந்து 43 ஆயிரத்தி 725 பாக்கெட்டுகளில் இருந்த 662 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை விற்றதன் மூலம் வைத்திருந்த ரூ.7 லட்சத்து 57 ஆயிரத்தி 500 பணம் ஆகியவற்றை காருடன் பறிமுதல் செய்து புகையிலை விற்பனையில் ஈடுபட்ட எட்டயபுரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது 49), சேலம் மேச்சேரியை சேர்ந்த ரமேஷ் (47) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT