தமிழக செய்திகள்

கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல 650 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கம்

விடுமுறை காலம் என்பதால் வெளியூர் பயணம் அதிகரித்து இருப்பதையொட்டி தேவையான இடங்களுக்கு அதிகாரிகள் கூடுதல் பஸ் வசதியை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இன்று வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 650 பேருந்துகள் விடப்பட்டுள்ளது.

திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.

விடுமுறை காலம் என்பதால் வெளியூர் பயணம் அதிகரித்து இருப்பதையொட்டி தேவையான இடங்களுக்கு அதிகாரிகள் கூடுதல் பஸ் வசதியை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் கோயம்பேடு, மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.