சின்ன வெங்காயம் 
தமிழக செய்திகள்

விலை உயர்வு எதிரொலி: வயலில் இருந்த 560 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

சின்ன வெங்காய மூட்டைகளை தலா 70 கிலோ எடை போட்டு, 8 மூட்டைகளாக தனது வயலின் அருகே உள்ள தார்ச்சாலையோரமாக வைத்திருந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயி பாரதிராஜாவின் வயலில் இருந்து 560 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டது. ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள வெங்காய மூட்டைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 42), விவசாயி. இவர் சமீபத்தில் வயலில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை பாரதிராஜா சுத்தம் செய்து திருச்சி வெங்காய மண்டிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார்.

இதற்காக அந்த சின்ன வெங்காய மூட்டைகளை தலா 70 கிலோ எடை போட்டு, 8 மூட்டைகளாக தனது வயலின் அருகே உள்ள தார்ச்சாலையோரமாக வைத்திருந்தார்.

இந்தநிலையில் அடுக்கி வைத்திருந்த 560 (8 மூட்டை) கிலோ சின்ன வெங்காயம் மூட்டைகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும். இதுகுறித்து பாரதிராஜா பாடாலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT