தமிழக செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

காத்திருப்போர் பட்டியலில் இருந்த உமா ஐபிஎஸ் சென்னை காவல்துறை தலைமையகத்தின் டிஐஜியாக நியமனம்.

தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் எஸ்பியாக ஜெயக்குமார், கடலூர் எஸ்பியாக விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் எஸ்பியாக சாய் பிரனீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் எஸ்பியாக மதிவாணன், விருதுநகர் எஸ்பியாக கவுதம் கோயல், தருமபுரி எஸ்பியாக அருண் கபிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி எஸ்பியாக அனிதா, நாமக்கல் எஸஅபியாக யாதவ் கிரிஷ் அசோக், மதுரை எஸ்பியாக தேவநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை எஸ்பியாக கேல்கர் பாலசந்திரா, தேனி எஸ்பியாக சாமுவேல் பிரவீன், நெல்லை எஸ்பியாக விஷ்வேஸ் பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை எஸ்பியாக எஸ்னேகப்பிரியா, திருப்பூர் எஸ்பியாக சிருஷ்டி சிங், அரியலூர் எஸ்பியாக செல்வக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பூக்கடை காவல் துணை ஆணையராக கோபி, சென்னை சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையராக பல்ல கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த உமா ஐபிஎஸ் சென்னை காவல்துறை தலைமையகத்தின் டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.