தமிழக செய்திகள்

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்ற 6 மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.காய்ச்சல், சளி, பரிசோதனை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புக்கு அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

* சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்ற 6 மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

* காய்ச்சல், சளி, பரிசோதனை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புக்கு அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

* தமிழகம் முழுவதும் ஒன்றரை மாதமாக நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 28.02 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT