பயணிகள் ரெயில் 
தமிழக செய்திகள்

சென்னை சென்ட்ரல்- சூலூர்பேட்டை உள்ளிட்ட 5 பயணிகள் ரெயில் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் (66003) நாளை ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி காரணமாக சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் பெடபரியா-நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரை (6 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதையொட்டி சில பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-

* சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (வண்டி எண்.66039), சூலூர்பேட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் பயணிகள் ரெயிலும் (66042) நாளை ரத்து செய்யப்படுகின்றன.

* சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும் (66041) நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சூலூர் பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (66040) நாளை ரத்து செய்யப்படுகின்றன.

* சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் (66003) நாளை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT