தமிழக செய்திகள்

ஈசிஆரில் பெண்களை துரத்திய சம்பவம்- 5 இளைஞர்கள் கைது

நேற்று 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மாலை மலர்

சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் சிலர் காரில் துரத்திச் சென்ற சம்பவத்தில் காரில் வந்த இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த சம்பவத்தில் நேற்று 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.