தமிழக செய்திகள்

பாய்லர் வெடித்து உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்து போலீசார் விசாரணை.பாதுகாப்பை உறுதி செய்யப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு.

மாலை மலர்

சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்று எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் பெருமாள் வயது (52) கரிமேடு பகுதியை சேர்ந்தவர்.

இச்சம்பவம் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.