தமிழ்நாடு செய்திகள்

சுற்றுலா வந்த மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஆற்றில் தீயணைப்புத் துறை, போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடி வந்தனர்.சுற்றுலா வந்த மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மாலை மலர்

சோலையாறு சுங்கம் ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை, போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், மாணவர்கள் 5 பேரையும் சடலமாக மீட்டுள்ளனர்.

உயிரிழந்த 5 பேரும் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் இருந்து சுற்றுலா வந்த மாணவர்கள் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.