தமிழக செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு அறிமுகமாகும் 4 புதிய ரக பீர்கள்

பீர் வகைகள் 17 ரகங்கள் தற்போது விற்பனையில் உள்ளன

பட்வைசர், ஹேவர்ட்ஸ் 5000, காட்பாதர், பூம், மேக்ஸ் 11000, ஜிங்காரோ, கல்யாணி பிளாக் லேபிள், புல்லட், வுட்பெக்கர், பிளாக் பஸ்டர் ஆகிய ரகங்கள் விற்பனையில் உள்ளன.

தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான டாஸ்மாக் மதுபான கடைகளிலும் அதன் எலைட் கடைகளிலும் ஒட்டு மொத்தமாக 800-க்கும் மேற்பட்ட மதுபான தயாரிப்புகள் விற்கப்படுகிறது.

பீர் வகைகள்

உள்ளூர் மதுபான ஆலைகளில் தயாரிக்கப்படும் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா, பீர் வகைகள், பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மது வகைகள் விற்பனையாகிறது.

அந்த வகையில் பீர் வகைகள் 17 ரகங்கள் தற்போது விற்பனையில் உள்ளன. கிங்பிஷர், பிரிட்டீஷ் எம்பயர், எஸ்.என்.ஜே. 10000, ஸ்பீல் ட்ரிபிள் ஸ்ட்ராங், பிளாக் பேர்ல், டியுபார்க், கார்ல்ஸ்பெர்க், பட்வைசர், ஹேவர்ட்ஸ் 5000, காட்பாதர், பூம், மேக்ஸ் 11000, ஜிங்காரோ, கல்யாணி பிளாக் லேபிள், புல்லட், வுட்பெக்கர், பிளாக் பஸ்டர் ஆகிய ரகங்கள் விற்பனையில் உள்ளன.

4 புதிய ரகங்கள்

இந்தநிலையில் டாஸ்மாக் நிறுவன போர்டு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையின்போது மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இறக்குமதி

அப்போது புதிதாக 20 வகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. அதில் 4 வகையான பீர்களும் அடங்கும். பிர்ரா, கர்நாடகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள ஹெய்னஹென் சில்வர், சத்தீஸ்கரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிம்பா ரோர், லோன் உல்ப் ஆகியவையாகும்.

இந்த ரகங்கள் குறைந்த பட்சம் ரூ.250 ஆக இருக்கும். தீபாவளியையொட்டி அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் ரகங்கள் எலைட் மதுபான கடைகளில் கிடைக்கும்.

இதற்கான அனுமதியை அரசு வழங்கியதும் இறக்கு மதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT