பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில், அரியங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு பார்கவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 மாதங்களுக்கு முன்பு ரிதன்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.
நேற்று அதிகாலை குழந்தை ரிதன்யா பசியால் அழுதது. அப்போது குழந்தைக்கு பார்கவி தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்து விட்டார். ஒரு மணி நேரம் கழித்து பார்த்த போது குழந்தை அசைவின்றி படுத்திருந்தது கண்டு அருகில் இருந்த கிராம செவிலியரை அழைத்து பரிசோதித்தார்.
செவிலியர் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த பார்கவி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். குழந்தையின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் பால் குடிக்கும் போது எதிர்பாராத விதமாக புரை ஏறியதால் குழந்தை ரிதன்யா உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து காஞ்சிகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.