விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறையாகும். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை கிடைக்கிறது.
இதனால், வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திரு நெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு கடந்த வியாழக்கிழமை 585 சிறப்பு பஸ்களும், கடந்த வெள்ளிக்கிழமை 1,255 பஸ்களும், கடந்த 12-ந் தேதி 1,030 பஸ்களும், 13-ந் தேதி 650 பஸ்களும் இயக்கப்பட்டது.
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப் பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மேற்கண்ட இந்த நாட்களில் 585 பஸ்களும் இயக்கப்படுகிறது.
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.
மாத வரத்தில் இருந்து கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தலா 110 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.
மேலும் 14-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 765 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப 3,565 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து நாளை சென்னைக்கு திரும்ப 2,240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாளை மறுநாள் சென்னைக்கு 1,325 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.