தமிழக செய்திகள்

சேலம் செவ்வாய்பேட்டையில் வியாபாரி கொண்டு சென்ற 3.3 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி கொலுசுகளை கருவூலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சேலம்:

சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் முன்பு தேர்தல் பறக்கும் படை வடக்கு தொகுதி அதிகாரி தேவகுமார் தலைமையில் வாகன சோதனையில் நேற்று இரவு ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த சேலம் குகை மார்க்கெட் தெருவை சேர்ந்த வெள்ளி வியாபாரியான ரவி என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 3 கிலோ 300 கிராம் எடை கொண்ட வெள்ளி கொலுசுகள் இருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என கூறி பறக்கும் படை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதனை கருவூலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.