தமிழக செய்திகள்

தமிழகத்தில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 31 மாவட்டங்கள்!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என தகவல்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று நாளை புயலாக வலுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, செங்கல்பட்டு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, பெரம்பலூர் மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாமக்கல், திருச்சி, கடலூர், நாகை, மதுரை, கரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT