தமிழக செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா சிக்கியது- 3 பேர் கைது

தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது, இதனைத் தொடர்ந்து ரூ 3 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா பறிமுதல்.

கார், மற்றும் மினி மீன் லாரி ஆகியவற்றை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது மினி லாரியில் இருந்த மீன் கூடைகளுக்குள் 300 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு கடத்திவரப்பட்டது தெரிய வந்தது.

தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக ரவுடிகள் கண்காணிப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

கிழக்கு கடற்கரை சாலை

இந்நிலையில் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வைத்து ஆந்திரா பதிவெண் கொண்ட கார், மற்றும் மினி மீன் லாரி ஆகியவற்றை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது மினி லாரியில் இருந்த மீன் கூடைகளுக்குள் 300 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு கடத்திவரப்பட்டது தெரிய வந்தது.

கஞ்சா கடத்தல்

அதனை தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது, இதனைத் தொடர்ந்து ரூ 3 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜோஸ்வா ஞானராஜ் (47) ஆந்திராவைச் சேர்ந்த தன்னவேல் (51) யடல ஸ்ரீனிவாஸ் கல்யாண் ஆகிய 3 பேரையும் கைது செய்து மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணை

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார்,மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கைதான 3 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT