தமிழக செய்திகள்

3 மனுக்கள் தள்ளுபடி: இது துணை முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி- தமிழக அரசு

வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றனர்.

மாலை மலர்

சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த இந்த மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றனர்.

உதயநிதியின் பேச்சை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கவும், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும் மனுக்களில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து தமிழக அரசு கூறுகையில், " துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

சனாதன பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய 3 ரிட் மனுக்களையும் மனுதாரர்கள் திரும்பப் பெற்றனர்.

இது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி" என்று தெரிவித்துள்ளது.