தமிழக செய்திகள்

அ.தி.மு.க எம்.எல்.ஏ.-க்கள் 3 பேர் ராஜினாமா- த.வெ.க.-வில் இணைய திட்டம்?

அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 44-ஆக குறைந்தது.

மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமையில் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

அதன்படி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.

இதனால், அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 44-ஆக குறைந்தது.

இந்நிலையில், ராஜினாமா செய்த 3 பேரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 3 பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்தனர்.