தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, ஜோலார்பேட்டையில் இருந்து கே.எஸ்.ஆர் பெங்களூருவிற்கு செல்லும் பயணிகள் ரெயில் ஜூலை 16-ந் தேதியில் இருந்து 19-ந்தேதி வரை மற்றும் ஆகஸ்ட் 3 ஆகிய தேதிகளில் பெங்களூரு கண்டோன்ட்மென்ட்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே போல, எர்ணாகுளம்-பெங்களூரு, சென்னை சென்ட்ரல்-பெங்களூரு, கன்னியாகுமரி-பெங்களூரு, கோவை-பெங்களூரு, சேலம்-யஸ்வந்த்பூர் உள்ளிட்ட மொத்தம் 27 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.