சென்னையில் ரூ.12.25 லட்சம் மதிப்புள்ள 24.5 கிலோ கஞ்சா பண்டல்களை ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புருலியா-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் பொதுப்பெட்டியில் மறைத்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்து ஆர்பிஎப் விசாரணை நடத்தி வருகிறது.
தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எண்ணூர் அருகே ஆர்பிஎப் நடத்திய சோதனையில் கஞ்சா சிக்கியுள்ளது.
இதில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு கிலோ கஞ்சா, ரூ.77,000 ரொக்கத்தை ரெயில்வே போலீசாரும், பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா மற்றும் பணத்துடன் சுற்றித்திரிந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்குமாரை கைது செய்து ஆர்பிஎப் விசாரணை நடத்தி வருகிறது.
திருச்சி மாவட்டம் துறையூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.2.48 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.99,000 மதிப்புள்ள எவர்சில்வர் தவளைகள் பறிமுதல் செய்யப்பட்டது.