விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறி செயல்பட்டதாக, 23 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட தமிழ்நாடு இயற்கை வளங்கள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்தலை தவிர்க்க புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரால் மொத்தம் 76 குவாரிகள் ஆளில்லா விமானம் மூலமாக அளவீடு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.
இந்நிலையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு இன்று காலை விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் அறிவுறுத்தலின்படி ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்ட குவாரிகளில் குத்தகை பரப்பிற்கு வெளியே குவாரிப் பணி மேற்கொண்ட 23 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகின்றன.
மேலும் ஆளில்லா விமானம் அளவீடு அறிக்கையின்படி உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.