சேலம் மாவட்டம் மற்றும் ஏற்காட்டில் நேற்று பிற்பகல் வரை கடும் வெயில் தாக்கம் நீடித்து பொதுமக்களை அவதியுறச் செய்தது. மாலை நேரத்தில் மேகமூட்டம் அதிகரித்து சீதோஷ்ண நிலை திடீரென குளிர்ச்சியடைந்தது. ஏற்காட்டில் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சாரல் மழை தொடர்ந்து பெய்து 23 மி.மீ. மழை பதிவு செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பின்னர் மாலையில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
இதே போல ஏற்காட்டிலும் நேற்று மாலை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாலையில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவிய நிலையில் மாலை 6 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை நள்ளிரவு 12 மணி வரை சாரல் மழையாக பெய்தது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் ஏற்காட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் ஏற்காட்டில் நேற்றிரவு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.