தமிழ்நாடு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் தகவல்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வருகிற 21-ந்தேதி ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது.உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்திட அடுத்த மாதம் 5-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

மாலை மலர்

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்திட அடுத்த மாதம் 5-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.