தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியாகின்றன. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். கடந்த வாரம் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இன்று திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
காலை திருத்தணி முருகன் கோயிலில் முருகனை வழிபட்ட அவர், தற்போது கமலா திரையரங்கம் முன் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது ‘வேலோடு வாடா என் முப்பாட்டன் முருகா, உன் தமிழோடு உன் பேரன் நான் வாரேன்’ என்ற பாடலை பாடி பிரச்சாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து நாளை வேலூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.