தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக, நாதக என நான்குமுனை போட்டி நிலவியது.
இதில் திமுக கூட்டணியே பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறின. எதிர்க்கட்சியாக அதிமுக வரும் என தெரிவித்தன. ஆனால் ஆக்ஸிஸ் மை இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவிடுப்பொடியாகியுள்ளன.
நடிகர் விஜய்யின் தவெக 107 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 74 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இத்தேர்தலில் போட்டியிட்ட நான்கு கட்சித் தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியை தழுவியுள்ளார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையும் தோல்வியை தழுவியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தவெக வேட்பாளர் தென்னரசுவிடம் தோல்வியை தழுவியுள்ளார்.
சாத்தூரில் போட்டியிட்ட பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனும் தோல்வியை தழுவியுள்ளார். அங்கு திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வெற்றிப் பெற்றுள்ளார்.
இவர்களை தாண்டி முதலமைச்சர் வேட்பாளரான நாதக தலைவர் சீமான் டெபாசிட் கூடப் பெறாமல் தோல்வியைத் தழுவியுள்ளார். காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான், தவெக வேட்பாளர் பிரபுவிடம் தோல்வியை தழுவினார்.