தமிழக செய்திகள்

தமிழகத்தின் 17-வது சட்டசபை கூடியது

எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை தற்காலிக சபாநாயகர் கருப்பையா செய்து வைக்கிறார்.

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும், போதைப்பொருட்கள் தடுப்புப்படை அமைக்க கையெழுத்திட்டார்.

இந்தநிலையில் தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று காலை கூடியது. எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை தற்காலிக சபாநாயகர் கருப்பையா செய்து வைக்கிறார். தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க உள்ளனர்.

நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.