சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில் 12 காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் அடங்கிய காவல் குழுவினர் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வரும் நபர்கள், சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் மதுபார்களை, கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, J-7 வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று வேளச்சேரி, 100 அடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் கண்காணித்து, சோதனை செய்தபோது, அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பார் ஊழியர்கள் 1.பிரபாகரன், 2.சபரிமுத்து ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 16 மதுபாட்டில்கள், 423 பீர்பாட்டில்கள் என மொத்தம் 439 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
H-8 திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 13-ந்தேதி காலை திருவொற்றியூர், T.H ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபாரில் சோதனை செய்து, அங்கு சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 1. கார்த்திக், 2. பிரபாகரன் என்பவரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மேற்படி வழக்கில் தொடர்புடைய 3. கணேசா (எ) குறிஞ்சி கணேசன் என்பவரையும், இன்று வாஞ்சி நாதன் என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 8 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.200/- பறிமுதல் செய்யப்பட்டு மதுபார் மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல் குழுவினர் நேற்று திருவொற்றியூர் E.E. ரோடு டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்த நீதி, திருவொற்றியூர், T.H சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகள் அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்த ராஜபாண்டி, ரகுபதி, லெட்சுமணண் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
C-3 ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று கொண்டித்தோப்பு, அம்மன் கோயில் தெருவில் உள்ள டாஸ்மாக் பாரை கண்காணித்து அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த மாரியப்பன், என்பவரை கைது செய்து மதுபார் மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று பிராட்வே, தபால் அலுவலகம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரை கண்காணித்து அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த ரகு என்பவரை கைது செய்து மதுபார் மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று புதுவண்ணாரப்பேட்டை, பாலகிருஷ்ண தெருவில் உள்ள டாஸ்மாக் பாரை கண்காணித்து அங்கு சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த அமுல்ராஜ் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மில்லி அளவுள்ள 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் புது வண்ணாரப்பேட்டை பாரதியார் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த ராஜமாணிக்கம் என்பவரையும் கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி. அளவுள்ள 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு மதுபார் மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் இன்று அதிகாலை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் பாரை ஆய்வு செய்தபோது, அங்கு அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி மது விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு பார் உரிமையாளர் கார்த்திக் இளம்வழுதி, பார் மேலாளர் ஸ்டாலின் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுபார் மூடப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் எல்லை மற்றும் மதுபார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக தொடர் சோதனைகளை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.