தமிழக செய்திகள்

காஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபரின் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை

திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மாலை மலர்

காஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபரின் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி விளக்கடி கோவில் தெரு பகுதியில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் வீட்டை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இதில், 150 சவரன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கொள்ளை சம்பவம் தொடர்பாக, விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.