தமிழக செய்திகள்

15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

ஏஎஸ்பியாக இருந்த ரவீந்திர குமார் குப்தா பதவி உயர்வு செய்யப்பட்டு, புதுக்கோட்டை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காவல் படைத் தலைவராக இருந்த பவானீஸ்வரி ஐபிஎஸ், சிங்கப்பெண் அதிரப்படை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவில் சப்ளைஸ் டிஜிபியாக வெங்கட ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரவீன் அபினபுக்கு பதிலாக, தலைமை இயக்குநர் அலுவலகத்தின் காவல்படைத் தலைவராக அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரவீன்குமார் அபினபு சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக சரவண சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக ஜே.மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல் சட்ட, ஒழுங்கு டிஐஜியாக பி.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக அபிஷேக் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். நிஷா ஐபிஎஸ்க்கு மாற்றாக நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக எஸ்.பிருந்தா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்லக்குறிச்சி எஸ்.பி.யாக சனாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பி.யாக எஸ்.அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை எஸ்.பி.யாக அல்லாடிப்பள்ளி பவன்குமார் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏஎஸ்பியாக இருந்த ரவீந்திர குமார் குப்தா பதவி உயர்வு செய்யப்பட்டு, புதுக்கோட்டை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT