சீல் வைக்கப்பட்ட மணல் குடோனில் மணலை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட லாரிகள், மணலை கலக்க பயன்பட்ட ஜே.சி.பி. எந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு புழல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
செங்குன்றம் அருகே உள்ள புள்ளிலைன் ஊராட்சியில் ஆற்று மணலுடன் தரமற்ற கடற்கரை மணலை கலந்து முறை கேடாக அனுமதியின்றி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இயக்குனர் சீனிவாசராவ் தலைமையிலான பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது புள்ளிலைன் ஊராட்சியில் கடற்கரை மணலுடன் ஆற்று மணலை கலந்து விற்பனை செய்து வந்த 15 மணல் குடோன்கள் கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட மணல் குடோனில் மணலை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட லாரிகள், மணலை கலக்க பயன்பட்ட ஜே.சி.பி. எந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு புழல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் டி.கே.பிரபு தலைமையில் அதிகாரிகள் செங்குன்றம் பகுதிகளில் ஆய்வு செய்தனர். சோதனையின் போது வடகரை, புள்ளிலைன், கிராண்ட்லையன், காவாங்கரை, புழல் உள்ளிட்ட பகுதிகளில் கடற்கரை மணலுடன் ஆற்று மணலை கலந்து விற்பனை செய்யப்பட்டு இருந்த குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட குடோன்களுக்கு மணலை கடத்தி வந்த லாரிகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். கடற்கரை மணலுடன் ஆற்று மணலை கலந்து விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.